×

'பாரதிய ஜனதா கட்சியை நம்பி சிவசேனா இல்லை'..: சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் வெளியாகியுள்ள கட்டுரையால் மராட்டியத்தில் பரபரப்பு

மும்பை: மராட்டிய மாநிலத்தை பொறுத்தவரை அதிகாரத்தின் கட்டுப்பாடு முழுவதும் தங்களிடத்தில் தான் இருக்கிறது என்று பாரதிய ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியை நம்பி தான் சிவசேனா இருக்கிறது, என்ற மாற்றுத்தோற்றத்தை தேர்தல் முடிவுகள் தகர்த்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மராட்டிய மாநிலத்தில் அதிகார கட்டுப்பாடு முழுவதும் சிவசேனாவிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அத்வாலே, ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, பாஜக-சிவசேனா கூட்டணி தான் மராட்டியத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் தான் அரசு அமைக்க முடியும். கூட்டணி என்றால் ஆட்சி அமைவதற்கு முன் பேச்சுகள் நடைபெறுவது வழக்கம் தான்.

பெரும்பான்மை பலம் கொண்டுள்ள ஆட்சி பாஜக தான் என்பதால் முதலமைச்சர் பதவி அந்த கட்சிக்குத்தான் தர வேண்டும். மக்களவைத் தேர்தலின்போது ஆட்சியில் 50% பங்கு என்று சிவசேனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அது நிறைவேற்றப்பட வேண்டும், என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலின் போது பாரதிய ஜனதா-சிவசேனா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் அது நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மொத்தம், 288 தொகுதிகள் உள்ள மராட்டிய சட்டசபைக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சிவசேனா-பாஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா பிடிவாதமாக இருப்பதால் பா.ஜ.க தலைமையிலான அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Bharatiya Janata Party ,Shiv Sena ,Maharashtra , Bharatiya Janata, Shiv Sena, Saamana daily, Maharashtra
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...